தலயா ? தளபதியா ? யாருக்கு அரசியல் செட்டாகும் - பிரபல ஹீரோ ஓபன் டாக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  நெல்சன் இயக்கியிருக்கும் படம் 'மான்ஸ்டர்'. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானிஷங்கர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், சீனுமோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

SJ Surya opens up about Ajith and Vijay's Political entry

இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கடந்த மே 17 ஆம்  தேதி வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், பேசிய எஸ்ஜே சூர்யா, சமீபத்தில் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ், பாபி சிம்ஹா உள்ளிட்ட 'இறைவி' டீமுடன் படம் பார்த்தேன். பாபி சிம்ஹாவின் குழந்தை இந்த படத்தை ரசித்து பார்த்தது.

நான் ஏற்கனவே  சொல்லியிருந்தேன். என் படங்களான நெஞ்சம் மறப்பதில்லை, இறவாக்காலம் ஆகிய படங்கள் பொந்துக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறது. இந்த எலி வந்து அந்த படங்களை இழுத்து வரும் என்று சொன்னேன்.

விஜய், அஜித் அரசியலுக்கு வருவதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனா ஒரு விஷயம் சொல்றேன். ரெண்டு பேருமே ஒரு முடிவெடுத்தாங்கனா அத வெற்றிகரமாக முடிக்கக் கூடிய நபர்கள். ரெண்டு பேரையுமே பர்ஷனலா தெரியும் அதனால சொல்றேன்'' என்றார்.

தலயா ? தளபதியா ? யாருக்கு அரசியல் செட்டாகும் - பிரபல ஹீரோ ஓபன் டாக் வீடியோ