கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பற்றி தான் சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கிறது. கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து வெளியேறிய பாத்திமா பாபு Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில் சேரன் குறித்து திடுக்கிடும் கருத்துகளை தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று வனிதாவிற்கு பிக்பாஸ் செல்போன் அளித்து, பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற டாஸ்க் கொடுத்திருந்தார். அதன் படி வனிதா, சாக்ஷியையும் மோகன் வைத்தியாவையும் கொலை செய்தார். அவர்கள் இருவரும் ஆவி உடையில் அலைந்தனர்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சேரன் உள்ளிட்டோர் மேஜையில் உணவருந்திக்கொண்டிருக்கின்றனர். அப்போது சேரன், மீராவிடம் ஆக்ரோஷமாக சண்டையிடுகிறார். வேலை செய்யமா எஸ்கேப் ஆகிறேனு சொன்னீங்களாமேனு கேட்கிறார்.
அதற்கு பதிலளித்த சேரன் அப்படி சொன்னதுக்கு மன்னிச்சுக்கோங்க. ஆனா வேலை செய்ய வாங்கனு நான் கூப்டமாட்டேன். நீங்களா செய்யறதா இருந்தா பண்ணுங்க. இல்ல டீம்ல இருக்காதீங்க'' என்கிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day17 #Promo1#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HAFfmIkbN7
— Vijay Television (@vijaytelevision) July 10, 2019