பிக்பாஸ் சீசன் 2வில் ரசிகர்களை பெரிதாக கவர்ந்தவர் டேனியல். இவர் தற்போதைய பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும் எலிமினேஷன் பிராசஸ் குறித்தும் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ''வோட் சிஸ்டம் எனக்கே டவுட்டா தான் இருக்கு. ஏன்னா கடைசி சீஸன்ல சென்றாயன் மேட்டர் நடக்கும் போதே எனக்கு டவுட் இருந்தது. நான் கூட எல்லாருகிட்டயும் கெட்ட பேர் வாங்கிட்டு இருந்தேன். நல்லா இருந்தான். அந்த ரெண்டு பொண்ணுங்க கூட சேர்ந்து பேர கெடுத்துக்கிட்டான் என்று சொன்னாங்க.
ஆனா அந்த டைம்ல டக்குனு போகும் போதுஇத இருந்துச்சு. அன் அஃபிசியல் சைட் நெறயா இருக்கு. என் வொய்ஃப் தான் காட்டுனாங்க. சென்றாயன் தான் லீடிங்ல இருந்தாரு. போக மாட்டாருனு நினச்சோம்.
ஆனா அவர் வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது. ஏன்னா அவருக்கு அவ்ளோ ஃபேன் பாலோயிங் இருந்தது. வோட்டிங் முறையில் லீகலாக நிறைய விஷயம் இருக்குனு சொன்னாங்க. அத ஜனங்களும் தெரிஞ்சிகிட்டா நல்லா இருக்கும்'' என்றார்.