www.garudabazaar.com

Nayan Wikki Marriage : ரஜினி, ஷாருக், VJS, சூர்யா, ஜோதிகா, மணிரத்னம் இடமபெற்ற தருணம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரௌடி தான் திரைப்படத்தின் போது, அதன் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோருக்கு இடையே காதல் உருவாகி இருந்தது.

Celebrities picture from vignesh shivan nayanthara marriage

இதனைத் தொடர்ந்து, இந்த ஜோடி பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்தும் வந்தனர்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் வெளியிட்டு வந்த நிலையில், இணையத்திலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி இருந்தது.

இதனால், கோலிவுட்டின் க்யூட் ஜோடியான விக்னேஷ் சிவன் - நயன்தாரா, எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருந்தது. அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி, மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து, விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம், படு அமர்க்களமாக நடந்து முடிந்தது.

Celebrities picture from vignesh shivan nayanthara marriage

இந்த திருமண நிகழ்வில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதே போல, விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர், திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பெற்றிருந்தன.

Celebrities picture from vignesh shivan nayanthara marriage

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் நடந்து நேற்றுடன் சுமார் ஒரு மாதமான நிலையில், தங்களின் திருமணத்திற்கு கலந்து கொண்ட பிரபலங்கள் இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Celebrities picture from vignesh shivan nayanthara marriage

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் மணிரத்னம், நடிகர் ஷாருக்கான், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா, இயக்குனர் அட்லி, இசை அமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர், விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Celebrities picture from vignesh shivan nayanthara marriage

இது தொடர்பான புகைப்படங்களை நெகிழ்ந்து போய், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடவே, தற்போது ரசிகர்களையும் இந்த புகைப்படங்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.

Celebrities picture from vignesh shivan nayanthara marriage

தொடர்புடைய இணைப்புகள்

Celebrities picture from vignesh shivan nayanthara marriage

People looking for online information on Maniratnam, Nayan Wikki Marriage, Nayanthara, Rajinikanth, Shah Rukh Khan, Vignesh shivan will find this news story useful.