ஆரம்பமே ஜோர்..!- மகன் மற்றும் மகளுடன் Sports படத்தை தொடங்கிய ‘நேர்கொண்ட பார்வை’ தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் போனி கபூர் தயாரிக்கும் ‘மைதான்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று (ஆக.21) தொடங்கியது.

Boney Kapoor Maidaan shooting Keerthy Suresh Ajay Devgn

சமீபத்தில் போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் குமார் நடித்திருந்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பாலிவுட்டில் போனி கபூர் தயாரிக்கும் திரைப்படத்திற்கு ‘மைதான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் பிரபல கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிமின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகிறது. இதில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘தேசிய விருது’ வென்ற தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

ஹிந்தியில் ‘பதாய் ஹோ’ என்ற படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்கும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஆகாஷ் சவ்லா, அருணவ ஜாய் செங்குப்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் 1950-1963 வரை இந்திய கால்பந்து அணி படைத்த சாதனைகளை போற்றும் வகையில், இந்திய கால்பந்து விளையாட்டின் பொன்னான காலம் என்பதை குறிப்பிட்டு இப்படம் உருவாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று (ஆக.21) பூஜையுடன் தொடங்கியது, இந்த பூஜையில் தயாரிப்பாளர் போனி கபூர் அவரது மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர், மகள் குஷி கபூர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். ‘மைதான்’ படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.