அஜித்தின் வலிமை - மீண்டும் இணையும் காரணம் என்ன..? போனி கபூர் சொல்லும் மாஸ் தகவல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடித்துவரும் வலிமை படத்தை பற்றி பல முக்கியமான தகவல்களை தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்தார்.

அஜித்தின் வலிமை பற்றி போனிகபூர் | Boney Kapoor about ajith h.vinoth's valimai at BGM 2019

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஹீரோயின் மற்றும் வில்லன் குறித்த தகவல்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

இதனிடையே பிஹைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் நிகழ்வில் பங்கேற்ற போனி கபூர் வலிமை படத்தை பற்றி முக்கியமான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து அஜித்துடன் படம் பண்ணுவதற்கான காரணத்தை கேட்ட போது, அவர் கூறியதாவது, 'என் மனைவி ஶ்ரீதேவி தான் காரணம், அவர் தென்னிந்திய சினிமாவில் இருந்து பிரபலமடைந்து வந்தவர். என்னிடம் தென்னிந்திய படங்களை தயாரிக்க வேண்டும் என பலமுறை சொல்லியிருக்கிறார். அதுதான் அவர் செய்ய விரும்பிய நன்றிக்கடன்' என அவர் தெரிவித்தார். மேலும் வலிமை அப்டேட் பற்றி கேட்டதற்கு, வலிமை படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் எனவும், படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அஜித்தின் வலிமை - மீண்டும் இணையும் காரணம் என்ன..? போனி கபூர் சொல்லும் மாஸ் தகவல்கள்! வீடியோ

Entertainment sub editor