அஜித்தின் செம ஸ்டைலிஷான புகைப்படங்கள் - ஷாலினியுடன் தல.. ஃபேவரைட் ஜோடியின் லேட்டஸ்ட் இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை படத்தில் நடித்து வரும் அஜித்தின் புதிய லுக் வெளியாகி தற்போது ட்ரென்ட் அடித்து வருகிறது.

வலிமை அஜித்தின் புதிய புகைப்படங்கள் வைரல் | ajith's new look after valimai injury goes viral

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வலிமை படத்தின் வில்லன் மற்றும் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து தற்போது அஜித்தின் புதிய லுக் வைரல் ஆகி வருகிறது. ஒரு திருமணத்தில் இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டிருக்கிறது. க்ளீன் ஷேவ் லுக்கில், கோட் சூட் ட்ரஸில் அஜித் இருக்கும் போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இதையடுத்து வலிமை படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவிருக்கிறது.

மேலும் சென்னை லீலா பேலசில் நடந்த இந்த திருமண நிகழ்வில் நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினியும் கலந்து கொண்டுள்ளார். இருவரும் இருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்ட் அடித்து வருகிறது. 

Entertainment sub editor