Bigil USA Desk Others

“எல்லாம் யாரால...?” - தளபதியோட ரெயின்போ Flick வேற லெவல் வெறித்தனம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் புரொமோ வீடியோ ஒன்ரி வெளியாகியுள்ளது.

Bigileyyyyy Thalapathy Vijay's Rainbow flick in Bigil

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தில் ‘ராயப்பன்’, ‘மைக்கேல்’, ‘பிகில்’ என 3 கெட்டப்களில் நடித்திருக்கும் விஜய்யை காண பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, தற்போது பிகில் திரைப்படத்தில் நடிகர் விஜய் விளையாடும் ஃபுட்பால் கேமில் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ரெயின்போ Flick இடம்பெற்றுள்ள புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.