பிகில், மைக்கேல், ராயப்பனுக்காக வெறித்தனமாக காத்திருக்கும் தளபதி விஜய்யின் வில்லன்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 24, 2019 01:04 PM
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தில் 3 கெட்டப்களில் வரும் விஜய்யை காண ஆவலுடன் இருப்பதாக பிகில் திரைப்படத்தின் வில்லன் நடிகர்தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தில் ‘ராயப்பன்’, ‘மைக்கேல்’, ‘பிகில்’ என 3 கெட்டப்களில் நடித்திருக்கும் விஜய்யை காண பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், “‘ராயப்பன்’, ‘மைக்கேல்’, ‘பிகில்’ ஆகியோரை வரும் அக்.25ம் தேதி திரையில் காண காத்திருக்கிறேன்” என நடிகர் டேனியல் பாலாஜி பிகில் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் விஜய்யின் முகம் ப்ளர் செய்யப்பட்டும், டேனியல் பாலாஜியின் இடது நெற்றிக்கு அருகே பேண்ட்-ஐட் ஒட்டியும் உள்ளார்.