Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: BiggBoss கவின் நடிப்பில்.. 'மிரட்டும்' LIFT திரைப்படத்தின் Motion Poster! வெளியிட்ட 6 இயக்குநர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் மற்றும் விஜய் டிவி தொடர்களில் நடித்த கவின் தற்போது வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்துவருகிறார்.

biggboss kavin lift movie motion poster கவின்

நட்புனா என்னனு தெரியுமா திரைப்படத்தில் நடித்த கவின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் அனைவரிடத்திலும் நெருக்கமானார். பின்னர் அடுத்தடுத்த படவாய்ப்புகளும் அவருக்கு உருவாகின. இந்நிலையில் அவர் தற்போது வினீத் வரபிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் LIFT. இப்படத்தின் motion poster தற்போது வெளியாகியுள்ளது.

biggboss kavin lift movie motion poster கவின்

முன்னதாக லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்கள் லிஃப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடுவார்கள் என கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

அதன்படியே இன்று (மார்ச் 5-ஆம் தேதி)  மேற்கூறிய இயக்குநர்கள் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ள தமது ட்வீட்டில், ஆல் தி பெஸ்ட் கவின் மற்றும் படக்குழு என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் நடிக்கும் தளபதி65 பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கவினுக்கும் அம்ரிதாவுக்கும் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் ஆல் தி பெஸ்ட் என்றும் படத்துக்காக காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் ரவிக்குமார் தமது ட்வீட்டில், இந்த லிஃப்ட் காத்திருக்க வொர்த்தான லிஃப்ட்தான், இந்த மோஷன் போஸ்டரை லாஞ்ச் செய்வதில் தனக்கு ஹேப்பி தான் என குறிப்பிட்டுள்ளார்.

படிக்கட்டில் ரத்தக்கறைகள், பார்க்கிங்,லிஃப்ட் என பார்க்கும்போதே த்ரில் கிளப்பும் இந்த படம் EKAA Entertainment, Hepzi தயாரிப்பில் உருவாகியுள்ளது.

எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். நடனத்தை சதீஷ் கிருஷ்ணனும், சண்டைப் பயிற்சியை ஸ்டன்னர் சாமும் கவனித்துக் கொள்கின்றனர்.

ALSO READ: அட.. குழந்தையாவே மாறிடுச்சுயா இந்த பொண்ணு சிவாங்கி.. நடந்த சம்பவத்த நீங்களே பாருங்க..

தொடர்புடைய இணைப்புகள்

biggboss kavin lift movie motion poster கவின்

People looking for online information on Biggboss, Kavin, Lift, Motionposter will find this news story useful.