“1999-ல் என்னை அவமானப்படுத்திய சேரன்” - சரவணின் ஈகோ சண்டை பின்னணி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 02, 2019 11:44 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான போடு ஆட்டம் போடு லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் கில் கொடுத்த கெட்டப்பில் சிறப்பாக செய்தவர்கள், சுவாரஸ்யம் குறைவாக செய்தவர்கள் என்ற விவாதம் நடைபெற்றது.

இதில் பிக் பாஸ் வீட்டின் சீனியர்ஸான சேரன் மற்றும் சரவணன் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டு வாய் தகறாரில் முடிந்தது. வீட்டில் இருக்கும் பெரியவர்களே இப்படி சண்டை போட்டுக் கொண்டால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது கூட இல்லாமல், இருவருக்கும் இடையிலான ஈகோ கிளாஷ் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்ரி பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியளித்தது.
இந்த சீசன் தொடக்கம் முதலே இருவருக்கும் சரியாக ஒத்துப்போகாத சூழலில் சரவணன் மற்றும் சேரன் இடையே நேரடியாக சண்டை வெடித்தது. இந்த சண்டையை பெரிதுப்படுத்த விரும்பாத அவர்கள், தனித்தனியே எழுந்துச் சென்றனர். இருப்பினும், இந்த சண்டை பற்றிய விவாதம் பின்னர் மீண்டும் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் தொடங்கியது. அப்போது, இந்த ஈகோ ஏற்பட காரணமாக இருந்த சம்பவம் ஒன்றை சரவணன் கூறினார்.
அவர் கூறுகையில், ‘கடந்த 1999-ல் செங்கல்பட்டு அருகே கார் பஞ்சர் ஆகி நின்றுக் கொண்டிருக்கையில் அந்த பக்கமாக வந்த இருவர் தன்னிடம் வந்து பேசினர். அதில் இயக்குநர் சேரனும் ஒருவர். அன்றைக்கு இருந்த பண கஷ்டத்தில் நடு ரோட்டில் நின்று உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு இருக்கு இல்லை என்று சொல்லாமல், எவ்வளவோ உயரத்தை பார்த்துவிட்டீர்கள், பிறகு எதற்கு இந்த பையனிடம் வாய்ப்பு கேட்கிறீர்கள் என்று கேட்டார். அன்றைக்கு அவர் அப்படி கேட்டது என்னை எந்த அளவிற்கு காயப்படுத்தியது என்பது உங்களுக்கு தெரியாது’ என்றார்.
ஆக இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட காரணத்தினால், இயக்குநர் சேரனிடம் சரவணன் ஒதுங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வார இறுதிநாட்கள் எபிசோடில் வரும் கமல்ஹாசன் விவாதிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.