‘சேரனுக்கு இந்த அசிங்கம் தேவையா?’-மீராவின் பொய் குற்றச்சாட்டு பற்றி மனோபாலா சரமாரி கேள்வி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 01, 2019 01:23 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாராவாரம் பல விதமான பிரச்சனைகளுடம் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக நடந்த சம்பவங்களில் சேரன் மீது மீரா சுமத்திய பொய்யான குற்றாச்சாட்டு, அதற்கான குறும்படம், பெண்கள் மீது உரசுவதற்காக பேருந்தில் பயணித்ததாக கூறிய சரவணின் சர்ச்சை கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், Behindwoods-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இயக்குநரும், நடிகருமான மனோபாலா பிக் பாஸ் குறித்து, அதில் நடக்கும் சர்ச்சைகள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார். அப்போது பேசுகையில், ‘சேரன் எதற்காக பிக் பாஸ் போக வேண்டும்? பொருளாதார பிரச்சனையாக இருந்திருந்தால் கூட அவர் அங்கு சென்றிருக்க கூடாது. ஒரு பொண்ணு இடுப்புல கை வச்சாருன்னு தாம்தூம்னு கத்துது. அது மாதிரி ஒரு பேச்சு தேவையா? அப்புறம் அழுதாரு? அவரா அழுதாரா இல்ல யாரும் சொல்லி கொடுத்து அழுதாரா தெரியல?’ என்றார்.
மேலும், ‘பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு திட்டமிட்ட சதி. எல்லா போட்டியாளர்களும் ஸ்க்ரிப்ட் படி நன்றாக நடிக்கிறார்கள். இந்த வாரம் சேரன் மீது பழி, அடுத்த வாரம் அழுகை, அதுக்கு அடுத்த வாரம் எலிமினேஷன் என அனைத்தும் கச்சிதமாக திட்டமிடப்பட்டு நடக்கிறது. அதை பாக்குறதில் மக்களுக்கு என்ன இண்டரெஸ்ட் இருக்கு தெரியல’ என்று தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
‘சேரனுக்கு இந்த அசிங்கம் தேவையா?’-மீராவின் பொய் குற்றச்சாட்டு பற்றி மனோபாலா சரமாரி கேள்வி வீடியோ