KAAPAN USA OTHERS

பிக் பாஸ் வீடிற்குள் எண்ட்ரி கொடுத்த முன்னாள் பிக் பாஸ் Runner

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 96 நாட்களை எட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 போட்டியில் இரண்டாவது வெற்றி வாய்ப்பை பெற்ற ஐஸ்வர்யா தத்தா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

Vijay TV Aishwarya Dutta arrives Bigg Boss Tamil 3 Promo 3

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக போட்டிகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், டிக்கெட் ரூ ஃபினாலே டாஸ்கில் சிறப்பாக விளையாடி ‘கோல்டன் டிக்கெட்’-ஐ முகென் ராவ் தட்டிச் சென்றார். இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேற, இந்த வாரம் எவிக்‌ஷனுக்கு முன்பாகவே கவின் போட்டியை விட்டு விலகியுள்ளார்.

பிக் பாஸ் அறிவித்த ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டு கவின், பிக் பாஸ் போட்டியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தார். அதன்படி, நேற்றைய நிகழ்ச்சியில் கவின் வெளியேறினார். கவினின் எதிர்பாராத எவிக்‌ஷன் சாண்டிக்கும், லாஸ்லியாவுக்கும் கடும் மன கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான 3வது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பிக் பாஸ் சீசன் 2-வில் மிகுந்த சர்ச்சையையும், இறுதிப்போட்டியில் ரன்னர்-அப் ஆகவும் வெற்றி பெற்ற ஐஸ்வர்யா தத்தா எண்ட்ரி கொடுத்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே சாண்டியுடன் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா தத்தா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகள் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

மேலும், போட்டியாளர்களுக்கு ஐஸ்வர்யா தத்தா ஏதோ சர்ப்ரைஸ் கிஃப்ட் பரிசளித்தது போன்ற காட்சிகளும் புரொமோ வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அதில் என்ன கிஃப்ட் உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிக் பாஸ் வீடிற்குள் எண்ட்ரி கொடுத்த முன்னாள் பிக் பாஸ் RUNNER வீடியோ