www.garudabazaar.com

வந்ததும் நாரதர் வேலையா? சுரேஷ் தாத்தாவை ஜாலியாக கிண்டல் அடித்த நெட்டிசன்கள்.😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg boss 6 tamil suresh chakravarthy entry trending

Also Read | Super Mom : "ஒன்றரை வயசுல உன்ன விட்டுட்டு போயிட்டேன்ம்மா".. அம்மா சொல்ல சொல்ல அழுத மகள்.!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

bigg boss 6 tamil suresh chakravarthy entry trending

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

bigg boss 6 tamil suresh chakravarthy entry trending

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

bigg boss 6 tamil suresh chakravarthy entry trending

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி வந்திருக்கிறார். வந்ததுமே அமர்க்களமாக சக போட்டியாளர்களிடமும் ஜாலியாக பேசுகிறார். அந்த இடமே அதகளமாய் மாறுகிறது. வந்தவர் ஏடிகேவை ஊர் கிழவி என்றும் அமுதவாணனை ஊறுகாய் கிழவி என்றும் கிண்டல் அடிக்க பதிலுக்கு அவர்களும் கிண்டல் அடிக்கின்றனர். குறிப்பாக அமுதவாணனிடம் வதந்தி பேசி நாரதர் வேலையை செய்வது போல சுரேஷ் சக்கரவர்த்தி விளையாடுகிறார். பதிலுக்கு அமுதுவும் விட்டுக்கொடுக்காமல் ஈடு கொடுக்கிறார்.

bigg boss 6 tamil suresh chakravarthy entry trending

இதை பார்த்த சக போட்டியாளர்கள் அவர் அவராகவே நடிக்கிறார் என்றும் குறிப்பிட்டு ஜாலி பண்ணுகின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் நம் சுரேஷ் தாத்தா வந்ததும் நாரதர் வேலையை ஆரம்பித்து விட்டாரே.. இனி நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் கலகலப்பு நிகழும் என்று குறிப்பிட்டு சுரேஷ் தாத்தா என்று அன்போடு அவரை வரவேற்றும் கொண்டாடியும் வருகின்றனர். முந்தைய சீசனில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி, கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Super Mom : “ரொம்ப கஷ்டப்பட்டேன் ஆர்யன்.”.. மகனிடம் பிக்பாஸ் மணிகண்டாவின் மனைவி உருக்கம்.!

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss 6 tamil suresh chakravarthy entry trending

People looking for online information on Bigg Boss 6, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6 will find this news story useful.