www.garudabazaar.com

Video: இவ்ளோ 'நல்லா' டான்ஸ் ஆடுவாங்களா?... ரசிகர்களை 'மொத்தமாக' கவர்ந்த போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீடு பேஷன் ஷோ, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மொத்தமாக களைகட்டியது. இதில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை நிரூபித்தனர். இதற்கு நடுவர்களாக பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி இருவரையும் பிக்பாஸ் நியமனம் செய்தார். பேஷன் ஷோவில் அனைவருமே கலந்து கொண்டு அசத்தினர்.

Bigg Boss 4: Gabriella Charlton dance wins fans heart

ஜித்தன் ரமேஷ், கேப்ரியலா, ஷிவானி ஆகியோர் டான்ஸ் ஆடி அசத்தினர். குறிப்பாக மிகவும் அமைதியாக காணப்படும் கேப்ரியலா 'பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு' பாடலுக்கு செம டான்ஸ் போட்டார். மேடையில் மட்டும் ஆடிவிட்டு செல்லாமல் கீழே இறங்கி செம ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜோடி நம்பர் ஜூனியர் போன்றவற்றில் கலந்து கொண்டு டைட்டில் வின் செய்துள்ளார்.

என்றாலும் நீண்ட நாட்களுக்கு பின் பிக்பாஸ் மேடையில் அவர் ஆடிய டான்ஸை பார்த்து ரசிகர்கள் அசந்து போயினர். இவருக்கு இவ்ளோ நல்லா டான்ஸ் ஆட தெரியுமா? திரும்ப திரும்ப பாக்குற அளவுக்கு சூப்பர் டான்ஸ் என சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். நாமினேஷன் பட்டியலில் இவர் இடம்பெற்று இருந்தாலும் ரசிகர்கள் ஓட்டு போட்டு இவரை காப்பாற்றி விடுவார்கள் என்றே தோன்றுகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 4: Gabriella Charlton dance wins fans heart

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.