பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு வெகுவாக பரீட்சையமானவர் நடிகை மீரா மிதுன். இவரது சமூக வலைதள பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருவது வழக்கம். இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மீரா மிதுன் நித்யானந்தாவின் லிவிங் என்லைட்மென்ட் என்ற புத்தகம் ஒன்றை வாசிக்கும் அவர் அந்த புத்தகம் குறித்து ரசிகர்களுக்கு விளக்கி சொல்கிறார். மேலும் அந்த பதிவில் என் எண்ணங்கள் நல்லவிதமாகவும் என் மனது தூய்மையாகவும் இருப்பதால், முடிவில் நான் அமைதியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது நல்ல வைரலாகி வருகிறது. நடிகை மீரா மிதுன் '8 தோட்டாக்கள்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'போதை ஏறி புத்தி மாறி' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படுகிறார்.