www.garudabazaar.com

தளபதி 67 படத்தில் இணைந்த பீஸ்ட் படத்தின் பிரபல டெக்னீசியன்?.. போடு வெடிய! செம்ம COMBO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Beast Prince DOP Manoj Paramahamsa for Thalapathy67 Deets

Also Read | சீரியல் நடிகை ப்ரீத்தியை கரம்பிடிக்கும் 'பசங்க' பட இளம் நடிகர் – வைரலாகும் Post!

இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Beast Prince DOP Manoj Paramahamsa for Thalapathy67 Deets

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். சமீபத்தில் 'ஜில் ஜங் ஜக்' இயக்குனர் தீரஜ், இணை எழுத்தாளராக 'தளபதி 67' படத்தில் இணைந்துள்ளார்.

Beast Prince DOP Manoj Paramahamsa for Thalapathy67 Deets

இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன், சிம்பு நடிப்பில் வெளிவந்த விண்ணை தாண்டி வருவாயா, சிவகார்த்திகேயன் நடித்த 'PRINCE'ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

Also Read | PS2: பொன்னியின் செல்வன் - 2 படத்தின் ரிலீஸ் தேதி.. GLIMPSE வீடியோவுடன் வெளியான அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Beast Prince DOP Manoj Paramahamsa for Thalapathy67 Deets

People looking for online information on Lokesh Kanagaraj, Manoj Paramahamsa, Thalapathy67 will find this news story useful.