தியேட்டரில் ரசிகர்களை ஆடவைத்த ’ஜாலியோ ஜிம்கானா’ … வெளியானது வீடியோ Song!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Beast movie jolly O gymkhana song video released

பீஸ்ட் ரிலீஸ்…

நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடித்த பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கினார். அனிருத் இசையமைத்த இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.  பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸானது. மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Beast movie jolly O gymkhana song video released

ஆட்டம் போட வைத்த பாடல்கள்…

இந்த படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 அம் தேதி வெளியாகி இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. அது மட்டுமில்லாமல் ரிலீஸ் ஆனது தற்போது வரை இந்த பாடலைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 300 மில்லியனைக் கடந்துள்ளது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் இந்த பாடலுக்கு தங்கள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வெளியிட்டனர். அரபிக்குத்துக்குப் பிறகு பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடல்  வெளியாகி அதுவும் ஹிட்டானது. இந்த இரு பாடல்களும் படத்தைப் பார்க்கும் ஆவலை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக்கின. அதுபோலவே திரையரங்குகளில் இந்த பாடலுக்கு ஆட்டம் ஆடி ஜாலியாக ரசித்தனர்.

Beast movie jolly O gymkhana song video released

வெளியானது வீடியோ…

இந்நிலையில் படம் ரிலீஸாகி 20 நாட்களை நெருங்கியுள்ள நிலையில் ஜாலியோ ஜிம்கானா பாடலின் வீடியோ வடிவம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த பாட்டில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்ந்துள்ளன.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

தியேட்டரில் ரசிகர்களை ஆடவைத்த ’ஜாலியோ ஜிம்கானா’ … வெளியானது வீடியோ SONG! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Beast movie jolly O gymkhana song video released

People looking for online information on Jolly o gymkhana, Pooja Hegde, Vijay will find this news story useful.