Reliable Software
www.garudabazaar.com

Video - ரகிட.. ரகிட.. ரகிட... பாபா பாஸ்கரின் மரண மாஸ் நடனம்... Behindwoods விருது விழாவில் அமர்க்களம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர். இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம்.

baba bhaskar vera level dance at award show பாபா பாஸ்கரின் மரண மாஸ் நடனம்

அதேபோல் இந்த நிகழ்ச்சிக்குப் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த பல பிரபலங்களும் பங்கெடுத்திருந்தனர். புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் மாஸ்டருக்கு "Best Entertainer Special Mention on Reality Television" என்ற விருது வழங்கப்பட்டது. அதுவும் குக் வித் கோமாளி டீம் உறுப்பினர்கள் கையால் அவருக்கு விருது வழங்கப்பட்டது. பின்பு அவரது மகன் மகள் மற்றும் தாயை மேடைக்கு அழைத்த அவர் பெருமிதத்துடன் அந்த விருதை பெற்றுக்கொண்டார். இந்த விருது அவருக்கு கிடைக்க முக்கிய காரணமே அவரது உழைப்பும் எதையும் பாஸிட்டிவ் மனதுடன்  எதிர் நோக்கும் தன்மையும் தான். இன்று பாஸ்கர் மாஸ்டர் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். முக்கியமாக இளைஞர்களுக்கு அவரது எனர்ஜி மிகவும் பிடித்திருக்கிறது. எந்த டாஸ்க் கொடுத்தாலும் கடுமையான போட்டியாளர்களையும் போட்டியிட்டு ஜெயிக்கவேண்டும் என்று அவர் எடுக்கும் முயற்சிகளுக்கே பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் விருது மேடையில் அவரது கலகலப்பான நடனமும், எனர்ஜியான பேச்சும் இதோ..!

VIDEO - ரகிட.. ரகிட.. ரகிட... பாபா பாஸ்கரின் மரண மாஸ் நடனம்... BEHINDWOODS விருது விழாவில் அமர்க்களம்! வீடியோ

baba bhaskar vera level dance at award show பாபா பாஸ்கரின் மரண மாஸ் நடனம்

People looking for online information on Baba Bhaskar will find this news story useful.