குக் வித் கோமாளி பாபா பாஸ்கர்... ஜி.வி.பிரகாஷ் நடிச்ச அந்த படத்துக்கு இயக்குனர் இவர்தானாம்..!.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

baba bhaskar is the director of this movie பாபா பாஸ்கர் தான் அந்த படத்துக்கு இயக்குனர்

இந்த சீசனை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவகையில் ஆச்சரியத்தை அளிக்கிறார்கள். ஷகிலா தொடங்கி இளம் நடிகரான அஸ்வின் வரை சமைத்து அசத்துகிறார்கள். அதிலும் திரைத்துறையில் பலரையும் ஆட்டுவித்த புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் செய்யும் ரகளை சமையல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது கூட இதையே தான் வழிமொழிந்தார். இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர்  பற்றி பலருக்கும் தெரியாத ஒரு தகவல் இருக்கிறது. அவர் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஜி.வி பிரகாஷ், பார்த்திபன், யோகிபாபு நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான 'குப்பத்து ராஜா' என்ற படத்தை கதை, திரைக்கதை அமைத்து அவரே இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

baba bhaskar is the director of this movie பாபா பாஸ்கர் தான் அந்த படத்துக்கு இயக்குனர்

People looking for online information on Baba Bhaskar will find this news story useful.