www.garudabazaar.com

"குற்றமுள்ள நெஞ்சு".. அசீம் vs அமுது.. அனல் பறக்கும் வாக்குவாதம்.. இன்றைய பிக்பாஸில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Azeem and Amudhavanan argument over janany elimination

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. வார இறுதி என்பதால் நடிகர் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களுடன் உரையாடுகிறார். அப்போது, எழுந்து பேசும் அசீம்,"ஜனனியோட வாய்ப்பை பல வகையில பறிச்சிட்டாரு என்பதற்காக இந்த கார்டை அமுதவாணனுக்கு கொடுக்குறேன்" என அசீம் சொல்லிவிட்டு அமுதுவிடம் கார்டு ஒன்றை கொடுக்கிறார். பின்னர், இதுகுறித்து அசீம் மற்றும் அமுதவாணன் கிச்சன் பகுதியில் வாக்குவாதம் செய்கின்றனர்.

அப்போது, அமுதவாணன், "அது 100 சதவீதம் பொய் அசீம்" என்கிறார். இதனை கேட்ட அசீம், ஜனனிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்கிறார். தொடர்ந்து இதனை அமுதவாணன் மறுத்ததுடன் "இந்த கார்டு உனக்கு சேரவேண்டியது அசீம்" என்கிறார். அப்போது அசீம் "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்கிறார். இதனை கேட்டு அமுதவாணன் "சூப்பர்" என சொல்லிவிட்டு திரும்பி நடந்து செல்கிறார். அப்போது அசீம்,"ஜனனி இந்த வீட்டை விட்டு போக காரணம் நீங்க தான். அவங்களை பயன்படுத்திகிட்டு நீங்க safe ஆகிட்டீங்க, அந்த பொண்ணை வெளியே அனுப்பிட்டீங்க" என்கிறார். இதனால் இன்றைய பிக்பாஸ் போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and Amudhavanan argument over janany elimination

People looking for online information on Amudhavanan, Azeem, Biggboss6Tamil will find this news story useful.