நம்ம சிவசாமி மகனா இது... அசுரன் TeeJay-வின் தெறிக்கவிடும் தட்றோம் தூக்றோம்! பக்கா ஆக்ஷன்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் டீஜே நடித்துள்ள தட்றோம் தூக்றோம் படத்தின் ட்ரெய்லர் காட்சி வெளியாகியுள்ளது.
![asuran teejay's thatrom thookrom trailer is out asuran teejay's thatrom thookrom trailer is out](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/asuran-teejays-thatrom-thookrom-trailer-is-out-news-1.jpg)
தனி இசை ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமானவர் டீஜே அருணாச்சலம். இவர் அசுரன் படத்தில் தனுஷின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அசுரனில் இவர் காட்டிய அலட்டலான உடல் மொழி, இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து கொடுத்தது. இதனிடையே டீஜே நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தட்றோம் தூக்றோம். அருள் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தட்றோம் தூக்றோம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இதை வெளியிட்டுள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ள இத்திரைப்படம், பணமதிப்பிழக்கத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பிற அறிவிப்புகள் இதை தொடர்ந்து வெளியாகும் என தெரிகிறது.
Happy to release the trailer of #ThatromThookrom
Wishing the team nothing but the best❤️@Sdcpicturez @MEDIA_MARSHAL @DirArulS @KabilanVai @balubm @Iamteejaymelody @sakthisaracam @Sethu_Cine @trendmusicsouth @manirs_Dir @ProCNKumar @editorsudharsanhttps://t.co/uRanBhPdP1
— RJ Balaji (@RJ_Balaji) February 12, 2020
நம்ம சிவசாமி மகனா இது... அசுரன் TEEJAY-வின் தெறிக்கவிடும் தட்றோம் தூக்றோம்! பக்கா ஆக்ஷன். வீடியோ