இந்தியன்-2 விபத்து : ரெண்டு அடி தள்ளி விழுந்திருந்தா.. - அஞ்சலி செலுத்திய கமல் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் அஞ்சலி செலுத்திவிட்டு உருக்கமாக பேசியுள்ளார்.

இந்தியன் 2 விபத்தில் பலியானவர்களுக்கு கமல் ஒரு கோடி நிதியுதவி | kamal gives one crore to workers died in indian 2 mishap

இயக்குநர் ஷங்கர் தற்போது இயக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2. கமல் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தியன் 2-வின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூவர் பலியானார்கள். இதையடுத்து நடிகர் கமல் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். விபத்தில் பலியான அவர்களுக்கு ஒரு கோடி நிதியுதவி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  மூவருக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் கூறியதாவது, 'உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கும் ஒரு கோடி நிதி வழங்குகிறேன், உயிரிழந்தவர்களுக்கு இந்த இழப்பீடு போதாது, என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே இதை கருதுகிறேன். கிரேன் விபத்தில் இருந்து நான் நூலிழையில் உயிர் தப்பினேன், ரெண்டு அடி தள்ளி விழுந்திருந்தா, எனக்கு பதிலாக வேறு ஆள் இப்போது பேசியிருக்க கூடும் ' என்று அவர் கூறியுள்ளார்.

Entertainment sub editor