"அந்த ஃபீலிங்க்கு எண்டே இல்ல.. உயிரோட இருந்தா..".. தெறிக்கவிட்ட ஆர்யா.. ‘காதலர் தின’ வைரல் புரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் வருவதையொட்டி விஜய் டிவியில் ‘காதலே காதலே’ எனும் நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாகிறது.

Arya and sayyeshaa Kadhale Kadhale Program ஆர்யா சாயிஷா

விஜய் டிவி தொடர்களிலும், விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபெறும் கலைஞர்களிடையே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அனைவரும் தாங்கள் மணம் செய்துகொண்ட தம்பதிகளுடனேயே கலந்துகொண்டனர். அவர்களிடம் இருக்கு காதல், அன்பு, புரிதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து சுவாரஸ்யமான போட்டிகளுடன் இந்த ஷோ நடந்திருப்பதாக தெரிகிறது.

Arya and sayyeshaa Kadhale Kadhale Program ஆர்யா சாயிஷா

பிக்பாஸ் புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தம்பதிகளாகவே வருகை தந்து கலந்துகொண்டனர். கடந்த 2019 மார்ச் மாதம் காதல் திருமணம் செய்துகொண்ட ஆர்யா - சாயிஷா தம்பதி பங்கேற்ற இந்த ஷோ வரும் ஞாயிறு மதியம் 3:00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாவதையொட்டி இந்த நிகழ்ச்சியின் புரோமோ விஜய் டிவியில் வெளியாகியிருக்கிறது.

அதில் ஆர்யா காதலை பற்றி பேசும்போது, “உயிரோட இருந்தா நீ லவ் பண்ணி தான் ஆகணும்.. அது என்றுமே முடிவடையாத ஒரு ஃபீலிங்!” என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்யாவின் இந்த வசனங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ள ஆர்யா, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘எனிமி’ திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். 

ALSO READ: 'மொதல் முறை என் தங்கம் நயன்தாரா இவருக்கு ஜோடி ஆகுறத பாத்து பொறாமை படல!' - விக்னேஷ் சிவனின் பட்டையைக் கிளப்பும் #சோஷியல் மீடியா போஸ்டுகள்!

தொடர்புடைய இணைப்புகள்

Arya and sayyeshaa Kadhale Kadhale Program ஆர்யா சாயிஷா

People looking for online information on Arya, ஆர்யா, காதலர் தினம்KadhaleKadhale, சாயிஷா, விஜய்டிவி, Sayyeshaa, ValentinesDaySpecial, VijayTelevision will find this news story useful.