கொரோனா குறித்து மௌனம் கலைத்த ஏ.ஆர்.ரஹ்மான் : "வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்ல இதுவா நேரம்..?"
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலை செய்பவர்களும். வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அநாவசியமாக யாரும் வெளியில் வருவது இல்லை. இந்த நிலையில் சுயநலம் இன்றி மக்களுக்கு உதவி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஏ. ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் "உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் இருக்கிறார். வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்ல இது நேரம் இல்லை. அரசாங்கம் சொல்வதை கேளுங்கள். வீணாக மற்றவர்களுக்கு வியாதியை பரப்பாதீர்கள். நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக மருத்துவரை சென்று பாருங்கள். அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். இரக்கத்துடன் நடந்து கொள்வோம். கோடி கணக்கான மக்களின் வாழ்க்கை உங்கள் கைகளில் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
This message is to thank the doctors, nurses and all the staff working in hospitals and clinics all around India, for their bravery and selflessness... pic.twitter.com/fjBOzKfqjy
— A.R.Rahman (@arrahman) April 1, 2020