www.garudabazaar.com

‘ஒரே மாசத்துல ரெண்டு!’.. விஜய் சேதுபதியின் மற்றுமொரு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘மக்கள் செல்வன் ’நடிகர் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி பானு முதல்முறையாக கைகோர்த்துள்ள அனபெல் சேதுபதி திரைப்படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

Annabelle Sethupathi movie OTT release date is out அனபெல் சேதுபதி

இயக்குனர் விஜய்யின் முன்னாள் உதவி இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் (இயக்குனர்-நடிகர் ஆர். சுந்தர்ராஜனின் மகன்) இயக்கத்தில், விஜய் சேதுபதி, டாப்ஸி பானு நடித்துள்ள இந்த படத்தில் ஜெகபதி பாபு மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Annabelle Sethupathi movie OTT release date is out அனபெல் சேதுபதி

Passion Studios தயாரிப்பிலான இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, லம்பேர்கினி மியூசிக் வீடியோ புகழ் ஹர்ஷதா விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Annabelle Sethupathi movie OTT release date is out அனபெல் சேதுபதி

இந்நிலையில் தான் அனபெல் சேதுபதி படத்தின் வெளியீடு குறித்த தகவலை விஜய் சேதுபதி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Annabelle Sethupathi movie OTT release date is out அனபெல் சேதுபதி

அதன்படி, இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபியில் ஒளிபரப்பாகிறது.

அத்துடன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்ததுமே ரசிகர்கள் உற்சாகம் ஆகிவிட்டனர் என்பதால் பட ரிலீஸ்க்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இதனிடையே மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படத்தின் நேரடி திரையரங்க வெளியீட்டு தேதியும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: எவ்ளோ மாசம் ஆச்சு.. தியேட்டர்ல படம் பாத்து.. அதுவும் விஜய் சேதுபதியின் லாபம் படம் ரிலீஸ்!!. எப்போ தெரியுமா?

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Annabelle Sethupathi movie OTT release date is out அனபெல் சேதுபதி

People looking for online information on AnnabelleSethupathi, AnnabelleSethupathiFirstlook, AnnabelleSethupathiRelease, OTTRelease, Tapsee pannu, Trending, Vijay Sethupathi will find this news story useful.