www.garudabazaar.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், அண்ணாத்த DOP வெற்றி!!! அப்போ அதான்? வைரலாகும் PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். "விஸ்வாசம்" படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

Annaatthe movie superstar rajinikanth with DOP Vetri

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது. தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Annaatthe movie superstar rajinikanth with DOP Vetri

இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தா பகுதிகளில் நடக்கிறது, இந்த படப்பிடிப்புகள் இம்மாதம் வரை நடக்கும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. சமீபத்தில் எழுத்தாளர் நடிகர் வேல. ராம மூர்த்தி அண்ணாத்த படத்தின் BTS படங்களை பகிர்ந்திருந்தார்.

Annaatthe movie superstar rajinikanth with DOP Vetri

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொல்கத்தா ஒபராய் ஹோட்டலில் இருந்து இந்த படம் பதிவேற்றப்பட்டுள்ளது. 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Annaatthe movie superstar rajinikanth with DOP Vetri

People looking for online information on Annaatthe, Rajinikanth, Siruthai Siva, Vetri will find this news story useful.