'அந்த சீன்ல நடிக்கும் போது என்ன ஆச்சு தெரியுமா.?!' - ரஜினியின் எஜமான் பற்றி மீனா.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை மீனா ரஜினியுடன் நடித்த எஜமான் படத்தை பற்றி தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் மீனா. இவர் ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிறகு ரஜியுடன் ஜோடி சேர்ந்து முத்து, எஜமான், வீரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தற்போது ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மீனா ரஜினியுடன் நடித்த எஜமான் படத்தை பற்றி மனம் திறந்துள்ளார். தொலைக்காட்சியில் இன்று எஜமான் படத்தை பார்த்த அவர், ''நன்றி ரஜினி சார், ஏ.வி.எம் சரவணன் சார், ஆர்.வி.உதயகுமார் சார், எஜமான் எனக்கு மறக்கமுடியாத படம், மறக்க முடியாத அனுபவம்' என தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் அவர் ரஜினிக்கு மாலையை தூக்கி போடும் காட்சியை பகிர்ந்துள்ள அவர், 'இந்த காட்சியில் இருப்பது நிஜமான ஆச்சர்யம்,, காரணம் நான் துள்ளியமாக மாலையை ரஜினி சாரின் மீது தூக்கி போட்டேன்'' என அவர் எஜமான் படத்தில் நடித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.