அனிருத்தின் chartbuster ‘டு டு டு’… தியேட்டரில் கொண்டாடிய ரசிகர்கள்… வெளியானது வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஹிட் பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Anirudh chartbuster two two two song video released

காத்து வாக்குல ரெண்டு காதல்…

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.  படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க, கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, ராம்போ என்ற பப் பவுன்சர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் விஜய் சேதுபதி யாரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார் என்பதே படத்தின் கதை.

Anirudh chartbuster two two two song video released

ரிலீஸுக்குப் பின்…

இந்த படம் ரிலீஸூக்குப் பின் பார்வையாளர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றன. அதே போல படத்தைப் பற்றி சில எதிர்மறை விமர்சனங்களும் வைக்கப்பட்டன. சமூகவலைதளங்களிலும் படம் பார்த்தவர்கள் தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்தனர். இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் விமர்சனங்களுக்கான தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “பெரும்பான்மையான பொது மக்களின் ரசனைகளிலிருந்து தனித்த ஒரு சில சினிமா விமர்சகர்களின் கூற்றுகளை பொய்யாக்கி திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி வரும் தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். மக்களின் பேவரைட்… காத்து வாக்குல ரெண்டு காதல். உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று படத்தைப் பார்த்து ரசியுங்கள்” எனக் கூறியுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட் இப்போது இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

Anirudh chartbuster two two two song video released

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாடல்கள்…

இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் ப்ளஸ் பாய்ண்ட்களாக அமைந்தவை, அனிருத்தின் பாடல்கள்தான். படத்தில் இருந்து வெளியான டு டு டு பாடல் மற்றும் டிப்பம் டப்பம் ஆகிய பாடல்கள் ரிலீஸூக்கு முன்பே வைரல் ஹிட் ஆகின. அதிலும் குறிப்பாக நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூவரும் இடம்பெற்ற ‘டு டு டு’ பாடல் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. தியேட்டரில் இந்த பெப்பி பாடலுக்கு அவர்களோடு சேர்ந்து ரசிகர்களும் செம்ம ஆட்டம் போட்டனர். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் வீடியோ வடிவம் தற்போது வெளியாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

அனிருத்தின் CHARTBUSTER ‘டு டு டு’… தியேட்டரில் கொண்டாடிய ரசிகர்கள்… வெளியானது வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh chartbuster two two two song video released

People looking for online information on Anirudh, Samantha, Vijay Sethupathi will find this news story useful.