Hyd house News Banner USA

விஜய்சேதுபதியை தொடர்ந்து "தளபதி 64" படத்தில் இணைந்த அங்கமாலி டைரீஸ் பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Angamaly Diaries fame Antony Vrghese on board Thalapathy64

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

இதனையடுத்து மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 64 வது படமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் விக்ரம் வேதா , பேட்ட போன்ற படங்களில் வில்லனாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி தளபதி 64ல்  நடிக்கவுள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில்  இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இணைந்துள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அங்கமாலி டைரீஸ் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் என்பது குறிப்படதக்கது.

Entertainment sub editor