விஜய்யின் வாத்தி கம்மிங்.. இது வேற ஸ்டைல் ஆட்டம்.! ஆங்கர் பாவனா போடும் அசத்தலான நடனம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அதை வெளியிட்டுள்ளார் ஆங்கர் பாவனா. 

விஜய்யின் மாஸ்டர் பாடலுக்கு பாவனா நடனம் | anchor bhavana balakrishnan's dance video for vijay's master vaathi coming song

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து தொகுப்பாளினி  பாவனா பாலகிருஷ்ணன் அப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். க்ளாசிக்கல் நடனத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வாத்தி கம்மிங் பாடலில், விஜய்யும் அப்படி ஒரு க்ளாசிக்கல் நடனத்தை போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Entertainment sub editor