www.garudabazaar.com
iTechUS

ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம்.. திரண்டு வந்த ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகம்.. வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்  ராதிகா மெர்ச்சண்டிற்கும் ஜனவரி 19, 2023 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது.

Anant Ambani Radhika Merchant engagement bollywood celebrities list

Also Read | எங்கே செல்லும் இந்த பாதை.. நினைவிழந்த நிலையில் பாரதி.. பாரதி கண்ணம்மா சீரியல் ட்விஸ்ட்!

இவர்களது நிச்சயதார்த்த விழா முகேஷ் அம்பானியின் இல்லமான 'ஆண்டிலியா'வில் நடந்தது. பழமையான குஜராத்தி  பாரம்பரிய முறையில் 'கோல் தானா' மற்றும் 'சுனாரி விதி' போன்றவற்றைத் தொடர்ந்து மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

முகேஷ் அம்பானியுடைய ரிலையன்ஸ் குழுமத்தில் எரிசக்தி துறையை தற்போது ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார். சமீபத்தில் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு துபாயில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியிருந்தார். மேலும், ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய பொறுப்புகள் முகேஷ் அம்பானியின் மகன்கள் மற்றும் மகளுக்கு  அளிக்கப்பட்டன.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட். மும்பையில் பள்ளிக் கல்வியை முடித்த ராதிகா, அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார்.

அதன்பிறகு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர் பின்னர் தனது தந்தையுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார். இந்நிலையில், தற்போது தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார் ராதிகா மெர்ச்சண்ட்.

இந்த நிச்சயதார்த்த விழாவில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் ராஜ உடையில் நவநாகரீக தோற்றத்தில் வந்திருந்தனர்.

ஷாருக்கான் மனைவி கௌரி கான் மற்றும் அவரது மகன், சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி டெண்டுல்கர், அக்ஷய் குமார், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப், ஜான்வி கபூர் சகோதரிகள், வருண் தவான், சாரா அலிகான், அனன்யா பாண்டே, அர்ஜூன் கபூர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | Thalapathy 67 : விஜய் & மிஷ்கின் இணையும் தளபதி 67 பட ஷூட்..! எங்க ? எப்போ ? தெறி அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

Anant Ambani Radhika Merchant engagement bollywood celebrities list

People looking for online information on Anant ambani, Anant Ambani Radhika Merchant engagement, Bollywood celebrities, Radhika Merchant will find this news story useful.