''இவரு அமெரிக்க நடிகர்களை விட பெரிய ஆளு'' - நம்ம உலக நாயகனை புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் ஆகச் சிறந்த நடிகர்களை பட்டியலிட்டால் அதில் முதல் சில இடங்களில் கமல்ஹாசனின் பெயர் இருக்கும். அந்த அளவுக்கு அவர் நடிக்கும் ஒவ்வொரு வேடத்தையும், வித்தியாசமான மேக்கப், மாறுபட்ட முகபாவனைகள் என அசரடிப்பார்.  அதனால் தான் அவரை உலக நாயகன் என ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

American Actress praised McKenzie Westmore praised Kamal Haasan | கமல்ஹாசன் குறித்து பிரபல அமெரிக்க நடிகை புகழாரம்

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் குறித்து ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் (McKenzie Westmore) தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருடனான தனது நினைவுகளை பகிர்ந்திருந்தார். அதில், ''நான் குழந்தையாக இருக்கும் போது கமல்ஹாசன் இந்தியாவில் இருந்து அழகான பரிசுகளுடன் வருவார். நான் அவரது ரசிகை.

எனது சிறுவயதில் எனது அப்பா அவருக்கு மேக்கப் போடும்போது சந்தித்திருக்கிறேன். கடைசியாக அவரை சில வருடங்களுக்கு முன் சந்தித்தேன். இரண்டாவது ஃபோட்டோவில் எனது அப்பாவுடன் கமல் தந்த உடையை அணிந்திருக்கிறேன். இந்தியன் சினிமாவில் பெரிய நடிகர். அமெரிக்க நடிகர்களை விட பெரிய நடிகர்'' என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor