www.garudabazaar.com

"மலர் ஏன் உண்மைய சொல்லல.. 100 rs பெட் கட்டிருக்கேன்".. ரசிகரின் சந்தேகம்.. பிரேமம் இயக்குநர் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2015-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படம் பிரேமம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி,மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேசுவரன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Alphonse Putharen clarifies Premam climax scene to fan

முன்னதாக 2013ஆம் ஆண்டில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன், பிரேமம் படத்தை இயக்கி பெருவெற்றி பெற்றார். இந்த படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் முக்கியமாக பேசப்பட்டது.  இந்த படத்தில் சாய் பல்லவி மலர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கேரக்டருக்கு நடந்த சம்பவம் தொடர்பாகவும் க்ளைமாக்ஸ் காட்சிகள் தொடர்பாகவும் ரசிகர் கேட்டுள்ள கேள்வி உட்பட திரைப்பட உருவாக்கம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பேஸ்புக்கில் பதில் கூறியுள்ளார்.

அப்படி ஒரு ரசிகர் கேட்ட அந்த கேள்வியில், “ஓரு சந்தேகம் .. பிரேமத்தில் .. ஜார்ஜிடம் உண்மைகள் எதையும் சொல்ல விரும்பவில்லை என்று மலர் கடைசியாக சொல்கிறாள் .. அதை மூன்று முறை பார்த்த பிறகும் நாங்கள் குழப்பமடைகிறோம் .. மலருக்கு உண்மையில் நினைவுகள் இழப்பு ஏற்பட்டதா? அல்லது மலர் வேண்டுமென்றே ஜார்ஜை தவிர்க்க விரும்பினாளா? அல்லது சமீபத்தில் மலர் தன் நினைவைத் திரும்பப் பெற்றார், அதனால் மலர், திருமணம் செய்துகொண்டுள்ள ஜார்ஜிடம் பழைய உண்மைகளை சொல்ல விரும்பவில்லையா?  இவற்றில் எது சரி?  உங்கள் பதிலுக்காக எனது நண்பருடன் 100 ரூபாய் பந்தயம் கட்டியுள்ளேன்!” என கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த அல்போன்ஸ் புத்திரன், “மலர் நினைவை இழந்துவிட்டாள். அவள் பழைய நினைவு வந்ததும் அறிவழகனுடன் பேசியிருக்கலாம். உடனே அவனுடன் அங்கு சென்றதும் திருமண கோலத்தில் நிற்கும் ஜார்ஜ் செலினுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக மலர் உணர்கிறாள். ஆனால் அங்கு சூப்பராக,  ஜார்ஜ் மலருக்கு மீண்டும் நினைவு வந்துவிட்டதை புரிந்துகொள்கிறாள்.

இது உரையாடல்களில் கூறப்படவில்லை. ஆனாலும் நான் இந்த நேரத்தில் வயலினுக்கு பதிலாக ஹார்மோனிகா இசையுடன் காட்சியில் காட்டியுள்ளேன். உங்கள் சந்தேகம் நீங்கும் என்று நம்புகிறேன்.

ஆக, இந்த பதில்.. உங்கள் கேள்விகளில் கடைசி கேள்வியாக உள்ளது. சமீபத்தில் மலர் நினைவை திரும்ப பெற்றாள் என்பதுதான்...” என குறிப்பிட்டுள்ளார்.

Alphonse Putharen clarifies Premam climax scene to fan

People looking for online information on Alphonse Putharen, Madonna Sebastian, Nivin Pauly, Premam, Sai Pallavi will find this news story useful.