Reliable Software
www.garudabazaar.com

ஓடிடிக்காக 4 ஹீரோயின்கள் கொண்ட அடுத்த படத்தை இயக்கியுள்ளாரா விஜய்? Trending தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகை கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தலைவி'.

is AL Vijay completed next film for OTT? social media trending

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான இப்படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீஸ்கு தயாராக இருக்கும் நிலையில், கொரோனா சூழலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 'தலைவி' படத்துக்குப் பிறகு, தமது அடுத்த படத்தை இயக்குநர் விஜய் இயக்கி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இந்த தகவல் முக்கிய செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படம் குறித்த சில தகவல்களும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி,  குறுகிய காலத்தில் விறுவிறுவென திட்டமிட்டு திரைப்படங்களை இயக்கும் திறன் கொண்ட இயக்குநர்களுள் ஒருவரான விஜய், தற்போது 4 நாயகிகளை வைத்து இந்த படத்தை ஓடிடி தளத்துக்காக மட்டுமே உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் எந்த ஓடிடியில் வெளியாகும் என தெரியவரவில்லை. அந்த தகவல் முடிவான பின்னர் தான் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் உள்ளிட்டவை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வேறென்ன? அந்த 4 ஹீரோயின்கள் தானே? குறிப்பிட்டிருக்கும் தகவல்களின்படி நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

அதுமட்டுமன்றி இந்த படத்துக்கு 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்விட்டரிலும் இந்த தகவல்கள் ட்ரெண்டிங்கிலும் டாக் ஆஃப் தி கோலிவுட் டவுனாகாவும் உள்ளன. ஆனால் இதுபற்றி சரியான மற்றும் முறையான அறிவிப்பினை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

ALSO READ: "ஒரு ரசிகனாக.. ஒரு தொகுப்பாளனாக.."..  சேதுபதியின் 'மாஸ்டர் செஃப்'.. லேட்டஸ்ட் Promo!

தொடர்புடைய இணைப்புகள்

is AL Vijay completed next film for OTT? social media trending

People looking for online information on October31stLadiesNight, Thalaivi, Trending, Vijay will find this news story useful.