Sinam D Logo Top
www.garudabazaar.com

VIDEO: "AK61 LOADING"..ஹெலிகாப்டரில் அஜித்! பிரபல வில்லன் நடிகர் பகிர்ந்த வைரல் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் ஹெலிகாப்டரில் பயணம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளன.

AK61 Ajith Kumar Traveling in Helicopter Viral Video

Also Read | BREAKING: சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. படத்தோட ரிலீஸ் தேதி இதுவா? மாஸ் தகவல்

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் 'வலிமை' படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத்  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. விசாகப்பட்டினம் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

AK61 Ajith Kumar Traveling in Helicopter Viral Video

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த ஏகே 61 படத்தில் நடித்து வரும் நடிகர் ஜான் கொக்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஹெலிகாப்டரில் பயணம் செய்த புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு "AK 61 Loading" என தலைப்பிட்டு உள்ளார். மேலும் நடிகர் அஜித்குமார், ஹெலிகாப்டரில் ஏறும் வீடியோ காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

AK61 Ajith Kumar Traveling in Helicopter Viral Video

நடிகர் அஜித், தனது நண்பர்களுடன் இமயமலையில் சில நாட்களுக்கு முன்பு வரை பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

AK61 Ajith Kumar Traveling in Helicopter Viral Video

பின்னர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்,லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Also Read | மகன்களுடன் தியேட்டர்ல படம் பார்க்கும் தனுஷ்.. என்ன படம் தெரியுமா? பரவும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

AK61 Ajith Kumar Traveling in Helicopter Viral Video

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Traveling in Helicopter, AK61 will find this news story useful.