www.garudabazaar.com

பீஸ்ட் ப்ரோமோ வீடியோல அஜித்! இதை கவனிச்சீங்களா? வேற மாரி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் ப்ரோமோ வீடியோவில், நடிகர் அஜித் குமார் படம் தொடர்பாக இருந்த ஒரு விஷயம் இருந்த நிலையில், அதனை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ajith vivegam accolades spotted in beast first single promo

கடந்த ஆண்டு, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் சிங்கிள்

பீஸ்ட் திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ள நிலையில், விஜய்க்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் குறித்து ஜனவரி மாத தொடக்கத்தில் படக்குழுவினர் தகவல் வெளியிட்ட நிலையில், அதன் பிறகு வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. அதே போல, முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது.

ப்ரோமோ வீடியோ

இந்த நிலையில் தான், ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல, பீஸ்ட் படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக, படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடலாசிரியர் - நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து, லூட்டி அடிக்கும் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

போனில் பேசிய விஜய்

அதே போல, நடுவில் நடிகர் விஜய்யும் தொலைபேசி மூலம், மூவரிடம் பேசவும் செய்துள்ளார். டாக்டர் படத்தில் வருவது போல, பீஸ்ட் திரைப்படத்திலும், அசத்தலான ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 'அரபி குத்து' என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல், பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்றும் ப்ரோமோ வீடியோவின் கடைசியில், அறிவிக்கப்பட்டுள்ளது.

விவேகம் திரைப்படம்

இந்த ப்ரோமோ வீடியோ, மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்த வீடியோவில், நடிகர் அஜித் குமார் படத்திற்கு தொடர்புடைய அசத்தல் தகவல் ஒன்றையும் ரசிகர்கள் கண்டுபிடித்து டிரெண்ட் செய்து வருகின்றனர். அஜித் குமார் நடிப்பில் வெளியாகியிருந்த 'விவேகம்' திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார்.

அனிருத் வாங்கிய விருதுகள்

அப்போது, 'Surviva' என்ற பாடல் மிகப் பெரிய அளவில் வைரலாகியிருந்தது. இதற்காக, சோனி மியூசிக் மற்றும் Saavn ஆகியோர் அனிருத்துக்கு விருது கொடுத்திருந்தனர். 'பீஸ்ட்' பாடலின் ப்ரோமோ வீடியோ, அனிருத் ஸ்டூடியோவில் வைத்து எடுக்கப்பட்ட நிலையில், அனிருத் வாங்கியிருந்த விருதுகள் பல, பின்னால் இருந்துள்ளது.

விஜய் - அஜித்

அவற்றுள், விவேகம் படத்திற்காக அனிருத் வாங்கிய விருதில், அஜித் புகைப்படம் இருப்பதை ரசிகர்கள் கண்டு கொண்டு விட்டனர். இது பலரின் கண்ணில் படவே, விவேகம் விருதினை தனியாக அடையாளப்படுத்தி, பகிர்ந்து வருகின்றனர். விஜய் படத்தின் ப்ரோமோ வீடியோவில், அஜித் படம் மற்றும் அது தொடர்பான விருதுகள் இடம்பெற்றுள்ளதால், சினிமா ரசிகர்கள் மத்தியில், இது தொடர்பான புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

ajith vivegam accolades spotted in beast first single promo

People looking for online information on Ajith Kumar, Anirudh Ravichander, Arabi Kuthu, Beast, Master, Nelson Dilipkumar, Pooja Hegde, Sivakarthikeyan, Vijay, Vivegam will find this news story useful.