www.garudabazaar.com

ஆடி கார் விஷயத்துல அடுத்த வழக்கை தொடர்ந்த பப்ஜி மதனின் மனைவி? பரபரப்பு தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 07, பிப்ரவரி 2022:- தங்களிடம் சொகுசு கார்கள் இல்லை Audi A6 என்ற கார் மட்டுமே உள்ளது கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா.

pubg madan wife krithika asks to return seized audi cars

யூடியூபர் பப்ஜி மதன்

சில வருடம் முன்பு ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் பப்ஜி மதன். இவர் மீது பின்னர் குண்டர் சட்டம் பாய்ந்தது. முன்னதாக இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

pubg madan wife krithika asks to return seized audi cars

பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா

அதன் பிறகு யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒரு பரபரப்பு பேட்டியை கொடுத்திருந்தார். அதில் அவர் கூறுகையில்,  “யூடியூப் சேனலை தொடங்கிய மதன், அதில் பப்ஜி கேம் விளையாடி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் எந்தச் சொத்துக்களையும் வாங்கவில்லை. என் வீட்டுக்காரர் தினமும் 20 மணி நேரம் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் ஓய்வு எடுப்பார்” என்று பேசியிருந்தார்.

pubg madan wife krithika asks to return seized audi cars

சொகுசு கார் இல்லை.. ஆடி கார் தான் இருக்கு. 

மேலும், அந்த சந்திப்பில், பார்வையாளர்களாலும், சூப்பர் சார்ட்டிங் மூலமாகவும்தா தங்களுக்கு வருமானம் கிடைத்தது என்று கூறியிருந்த கிருத்திகா, “நாங்க 2 கார் வெச்சிருக்கோம். சொகுசு கார் என சொல்லி தகவல் பரவுகிறது. ஆனால் சொகுசு கார் அவ்ர் பேரிலும் இல்லை. என் பேரிலும் இல்லை. அவர் ஆடி A6 கார் மட்டும் தான் வெச்சிருக்கார். நாங்கள் இருப்பது கூட வாடவை வீடு தான், அந்த ஆடி R8 கார்  கூட எங்களுடையது இல்லை.” என கூறியிருந்தார். 

pubg madan wife krithika asks to return seized audi cars

காரை திருப்பி கொடுங்கள்.. 

இந்நிலையில் போலீஸ் தங்களிடம் இருந்து பறிமுதல் செய்த அந்த 2 ஆடி ரக கார்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. .

Also Read: "யார்ரா நீ? என் குழந்தை Birthday-ல?".. பரபரப்பு எண்ட்ரி கொடுத்த ராதிகாவின் மாஜி கணவர்..

pubg madan wife krithika asks to return seized audi cars

People looking for online information on பப்ஜி மதன் மனைவி பேரம் பேசிய சிறை அதிகாரி, Krithika, PUBG Madan Wife, PUBG Madan wife Kiruthika, Pubg madan wife krithika, Pubg madan wife krithika phone call leak audio, Youtuber PUBG Madan will find this news story useful.