777 Charlie Trailer

A.R ரஹ்மான் மகள் திருமண விழா.. கலந்து கொண்ட அஜித் குடும்பத்தினர்! தீயாய் வைரலாகும் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

Ajith kumar family attended A R Rahman Daughter Wedding Reception

Also Read | கமல் - லோகேஷை சந்தித்த சிரஞ்சீவி & சல்மான் கான்! இதுதான் காரணமா? வைரலாகும் போட்டோக்கள்

தமிழில் ரோஜா, இருவர் போன்ற படங்கள் தொடங்கி, பாலிவுட்டிலும் முன்னணி நட்சத்திரங்கள், கலைஞர்களுடன் இணைந்து முன்னணி திரைப்படங்களில் இசையமைத்து புகழ்பெற்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவற்றுக்காக ஆஸ்கார் விருதுகள் வரை பல விருதுகளையும் பெற்றவர்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கும் மணமகன் ரியாஸ்தீனுக்கு சிலநாட்களுக்கு முன் திருமண வரவேற்பு நடந்தது. 

Ajith kumar family attended A R Rahman Daughter Wedding Reception

மணமகன் ரியாஸ்தீன் ஷேக் முகமது பிரபல சவுண்ட் என்ஜினியர் ஆவார். இவர் Waves Audio மற்றும் Audinate போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய சான்றளிக்கப்பட்ட பொறியாளர். இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அமித் திரிவேதி ஆகியோருக்கு ரியாஸ்தீன் நேரடி ஒலி பொறியாளராக பணியாற்றியவர்.

Ajith kumar family attended A R Rahman Daughter Wedding Reception

இந்த திருமண வரவேற்பு நிகழ்வில்   நடிகர் அஜித் குமாரின் மனைவியான ஷாலினி, மகள் அனோஷ்கா & மகன் ஆத்விக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அஜித் குமாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Ajith kumar family attended A R Rahman Daughter Wedding Reception

கடைசியாக அஜித் - ரஹ்மான் கூட்டணியில் வரலாறு படம் ரிலீஸ் ஆனது. இதுவரை அஜித் - ரஹ்மான் கூட்டணியில் 3 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன.

தற்போது  A.R ரஹ்மான்,  மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, அயலான் ஆகிய முக்கிய படங்களில் பணியாற்றுகிறார்.

Also Read | தனுஷ் நடிக்கும் புதிய படம்.. வெளியான சூப்பர் கேரக்டர் லுக் போஸ்டர்! அடுத்த ட்ரீட்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar family attended A R Rahman Daughter Wedding Reception

People looking for online information on A R Rahman Daughter Wedding Function, Ajith Kumar, Ajith kumar family, AR Rahman will find this news story useful.