அஜித் நடிக்கும் AK61.. ஷூட்டிங் எப்போ முடியும்? பட ரிலீஸ் எப்போ? போனிகபூர் கொடுத்த EXCLUSIVE அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar AK 61 Movie Shooting and Release Update from Boney Kapoor

Also Read | 8 வயது பையனுக்கு அம்மாவாக நயன்தாரா.. பேருந்தினுள் உச்சக்கட்ட போராட்டம்! வெளியான டீசர் VIDEO

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK 61 படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

Ajith Kumar AK 61 Movie Shooting and Release Update from Boney Kapoor

AK61 படத்தின் பூஜை ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்ற உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Ajith Kumar AK 61 Movie Shooting and Release Update from Boney Kapoor

இந்நிலையில் போனி கபூர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான AK 61 பட தகவலை பகிர்ந்து உள்ளார். அதில் " 35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையும்" என கூறியுள்ளார். மேலும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

Ajith Kumar AK 61 Movie Shooting and Release Update from Boney Kapoor

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

அஜித் நடிக்கும் AK61.. ஷூட்டிங் எப்போ முடியும்? பட ரிலீஸ் எப்போ? போனிகபூர் கொடுத்த EXCLUSIVE அப்டேட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK 61 Movie Shooting and Release Update from Boney Kapoor

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK 61 Movie, AK 61 Movie, AK 61 Movie Updates will find this news story useful.