Beast Others
www.garudabazaar.com

முதல் முறையாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வலிமை' திரைப்படம்.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

Ajith Birthday Valimai Movie World Television Premiere

வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் புத்தாண்டுடன் வலிமை படம் வெளியாகி 50 வது நாளை நிறைவு செய்துள்ளது.

Ajith Birthday Valimai Movie World Television Premiere

இந்நிலையில் வரும் மே மாதம் ஒன்றாம் தேதி, நடிகர் அஜித் குமாரின் 51 வது பிறந்தநாளில் வலிமை படம் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான விளம்பரங்கள் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன

வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Ajith Birthday Valimai Movie World Television Premiere

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடித்தனர். ராஜ் ஐயப்பா முக்கிய தம்பி வேடத்தில் நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்ற, சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றினார்.

Ajith Birthday Valimai Movie World Television Premiere

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றினார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்தார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Birthday Valimai Movie World Television Premiere

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar birthday, AK, Valimai, World TV, Zee, Zee Tamil will find this news story useful.