www.garudabazaar.com

பாரிஸ் நகர சாலைகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்... வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில்  எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Aishwarya Rajesh Latest Paris Trip Instagram Reels

Also Read | "பொறாமையோ வெறுப்போ இல்லை.. இதான் முக்கியம்".. மேனேஜர் மூலம் அஜித் வெளியிட்ட MOTIVATIONAL அறிக்கை !

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில்  ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து  படங்கள் வெளியாக உள்ளன.

Aishwarya Rajesh Latest Paris Trip Instagram Reels

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம், பூமிகா, திட்டம் இரண்டு ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ்,  டிரைவர் ஜமுனா படத்தில்  கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தை இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார்.

அதேபோல் கண்ணன் இயக்கத்தில் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். மேலும் பர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Aishwarya Rajesh Latest Paris Trip Instagram Reels

சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் சுற்றுலா சென்று அங்கிருந்து ஈபிள் கோபுரம் அருகில் அமர்ந்தும் நின்றும் நடந்தும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

பிரான்ஸ் தவிர நெதர்லாந்து நாட்டின் காற்றாலை நகரமான Zaanse Schans & ஆம்ஸ்டர்டம் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கே பிரசித்தி பெற்ற கோலோசியம் அரங்கின் வெளியே எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் வாட்டிகன் நகரில் உள்ள மியூசியத்தை சுற்றிப் பார்த்தார்.

இந்நிலையில்  பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற   ஈபிள் கோபுரம் அமைந்துள்ள சாலையில் கருப்பு நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் ஃபோட்டோ ஷூட் நடத்தி வீடியோவை இன்ஸ்டாகிராம்  ரீல்ஸாக ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

ஃபோட்டோகிராபர் ஆனந்த் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.‌

Also Read | RC15: ஆப்ரிக்க காட்டில் GYM.. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் ராம் சரண்! அசத்தல் வீடியோ

 

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh Latest Paris Trip Instagram Reels

People looking for online information on Aishwarya Rajesh, Aishwarya Rajesh Latest Photos will find this news story useful.