www.garudabazaar.com

OFFICIAL: BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்! செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Aishwarya Rajesh Brother Manikanta Rajesh in BiggBoss Season6

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த இரண்டு சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது.

சமீபத்தில் முடிந்த ஐந்தாவது சீசனும் கடந்த 4வது சீசனை போல் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கியது. பிக்பாஸ் சீசன் 6 தமிழ், இன்று அக்டோபர் 9  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்  என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.

Aishwarya Rajesh Brother Manikanta Rajesh in BiggBoss Season6

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

Aishwarya Rajesh Brother Manikanta Rajesh in BiggBoss Season6

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்ட ராஜேஷ் கலந்து கொள்ள இருப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  ஆந்திராவை சேர்ந்த மணிகண்ட ராஜேஷ் பல சீரியல்களில் நடித்துள்ளது குறிப்படத்தக்கது.

 

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh Brother Manikanta Rajesh in BiggBoss Season6

People looking for online information on Aishwarya Rajesh, Biggboss 6 Tamil, BIGGBOSS Season 6 Tamil, Manikanta Rajesh will find this news story useful.