ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் திரில்லர் வெப் சீரிஸ்… Title உடன் வெளியான செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ள அடுத்த வெப் சீரிஸ்களில் ஒன்றாக சுழல் உருவாகி வருகிறது.

Aishwarya Rajesh kathir new web series suzhal

Also Read | சார்பட்டா வெற்றிக்குப் பின் மீண்டும் ஓடிடியில்… ஆர்யா நடிக்கும் வெப் சீரீஸ் Title அறிவிப்பு!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அண்மையில் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் மற்றும் திட்டம் இரண்டு ஆகியவை முக்கியமான படங்களாக அமைந்தன. சமீபத்தில் அவர் நடித்த கனா திரைப்படம் சீனாவில் வெளியாகி சாதனை படைத்தது.

Aishwarya Rajesh kathir new web series suzhal

கதிர்…

தமிழ் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து குறைந்த அளவிலேயே படங்களில் நடித்திருந்தாலும், கதிர் தரமானக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பரியேறும் பெருமாள், மதயானைக் கூட்டம், மற்றும் கிருமி போன்ற படங்கள் அவருக்கு நல்லப் பெயரைப் பெற்றுத்தந்தன. அதையடுத்து இப்போது அவர் பார்த்திப்ன மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷோடு இணைந்து புதிய வெப் சீரிஸில் அறிமுகமாகிறார்.

Aishwarya Rajesh kathir new web series suzhal

சுழல்…

விக்ரம் வேதா பட புகழ் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதியினர் கதை எழுத, இந்த புதிய வெப் சீரிஸை குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மாவும், கிருமி இயக்குனர் அணுசரனும் இயக்குகின்றனர். அமேசான் ப்ரைம் வெளியீடாக வர உள்ள இந்த சீரிஸூக்கு ‘சுழல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். த்ரில்லர் வகையில் உருவாக்கப்படும் இந்த சீரிஸின் முதல் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அமேசான் ப்ரைம் தங்களுடைய அடுத்தடுத்த படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸ் பற்றி தெரிவித்துள்ள ப்ரைம் “ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போகும் நபர்களை பற்றிய தேடுதலில் வெளிவரும் பயங்கரமான உண்மைகள் பற்றிய கதை” எனக் கூறியுள்ளது.

Aishwarya Rajesh kathir new web series suzhal

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் திரில்லர் வெப் சீரிஸ்… TITLE உடன் வெளியான செம்ம அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh kathir new web series suzhal

People looking for online information on Aishwarya Rajesh, Kathir, Suzhal, Web Series will find this news story useful.