Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: "எனக்கு அடிபட்டதும் எங்கப்பா ஒரு அடாவடி பண்ணாரு".. ‘ஏலே’ படம் தொடர்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமுத்திரகனி, மணிகண்டன் மற்றும் பலர் நடிப்பில் சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ஏலே.

Aishwarya Rajesh father atrocity Aeley ஏலே படம் ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய் டிவியில் பிப்ரவரி 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகும் இந்த படத்தை சஷிகாந்தின் Y Not Studios மற்றும் விக்ரம் வேதா பட இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரியின் வால் வாட்சர்ஸ் பிலிம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சமுத்திரகனி, ஐஸ் வண்டி வைத்திருக்கும் ‘முத்துக்குட்டி’ என்கிற ஒரு அட்ராசிட்டி செய்யும் அடாவடியான தந்தை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.

இந்நிலையில் ஏலே படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு தனது தந்தை தொடர்பான நினைவுகளை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். அதில், “எங்கப்பாவும் ஒரு அடாவடி அப்பாதான். அவருடன் நான் செலவிட்ட பொழுதுகள் குறைவென்றாலும் நினைவுகள் அதிகம். எனக்கு 8 வயதாகும்போது அப்பா மறைந்தார். சிறு வயதில் நானும் எனது அண்ணனும் சண்டை போடும்போது என் புருவத்தின் அருகே அடிபட்டது.

அப்போது என் அப்பா என் நெற்றியில் இருந்த ரத்தத்தை பார்த்ததும் மிகவும் பதறி அடாவடி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் கூட நான் சாதாரணமாகவே இருந்தேன். ஆனால் தந்தையின் அன்பு என்பது ஹலீதாவுக்கு(இயக்குநர்) ஏலே படத்துக்கும் எனது வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை #AdaavadiAppa என்கிற ஹேஷ்டேகில் பகிர்ந்துள்ளார். 

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னதாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் அண்மையில் நடந்து வரும் 18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் Special Mention Award பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: "மீண்டும் இணையும் STR- ARR- GVM காம்போ!".. வெளியான Titleக்கும் ஜோதிகாவுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு தெரியுமா?!

மேலும் செய்திகள்

Aishwarya Rajesh father atrocity Aeley ஏலே படம் ஐஸ்வர்யா ராஜேஷ்

People looking for online information on Aelay, Aishwarya Rajesh, Halitha Shameem, Samudrakani will find this news story useful.