விஜய் சேதுபதி படத்துக்கு பிறகு அடுத்த படத்தை அதிரடியாக அறிவித்த பிரபல இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தர்மதுரை' படத்துக்கு பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இந்த படத்தை ஒய்எஸ்ஆர் புரொடக்ஷன் சார்பாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.

After Vijay Sethupathi's Maamanithan director announces next Movie

மேலும் இந்த படத்துக்காக முதன் முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்துக்காக இளையராஜா ஹார்மோனியம் இசைக்கும் ஃபோட்டோவை மகிழ்ச்சியுடன் யுவன் பகிர்ந்திருந்தார்.

இந்த படத்தில் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மாமனிதனுக்கு பிறகு ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ் அமெத்குமார் தயாரிக்கும் படத்தை இயக்கவிருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.