Godavari News Banner USA

பிரபல இயக்குநர் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் முக்கிய நடிகர் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடித்துவரும் ‘லாபம்’  படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.

Jagapathi Babustart shooting for Vijay Sethupathi Laabam

விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து  வரும் படம்  லாபம். இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட அறமும் அரசியலும் சார்ந்த படங்களை தந்து தேசிய விருது வென்ற இயக்குநரெஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.

விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.