www.garudabazaar.com

வனிதாவின் Lawyer வெளியிட்ட பரபரப்பான Audio ஆதாரம்.! யார் இந்த சூர்யாதேவி தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதாவை விமர்சித்த சூர்யாதேவி குறித்த பரபரப்பான ஆதாரத்தை அவரது வக்கீல் வெளியிட்டுள்ளார். 

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் வெளியான பரபரப்பு ஆடியோ | Actress Vanitha Vijaykumar's Lawyer releases Suryadevi's Phonecall Audio

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார்.

இதனிடையே வனிதா பீட்டர் திருமணம் பற்றி பல்வேறு கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பின. மேலும் சூர்யாதேவி என்பவர் வனிதாவை கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவிட்டு, மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் வனிதாவின் வழக்கறிஞர் சூர்யாதேவி பேசிய ஃபோன்கால் ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சூர்யாதேவியிடம் ஒருவர் கஞ்சா கேட்க, அவர் தனது தம்பியிடம் இருப்பதாகவும், அவனிடம் பேசிவிட்டு கால் செய்கிறேன் எனவும் சொல்கிறார். இந்த ஆதாரத்தை கொண்டு, சூர்யாதேவி சட்டவிரோதமாக சென்னையில் கஞ்சா விற்கும் நபர், அவர் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்க வைப்போம்'' என வனிதாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வனிதாவின் தரப்பில் இருந்து வெளியான இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வனிதாவின் LAWYER வெளியிட்ட பரபரப்பான AUDIO ஆதாரம்.! யார் இந்த சூர்யாதேவி தெரியுமா..? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் வெளியான பரபரப்பு ஆடியோ | Actress Vanitha Vijaykumar's Lawyer releases Suryadevi's Phonecall Audio

People looking for online information on Audio release, Suryadevi, Vanitha, Vanitha Vijaykumar, Vanitha Vijaykumar Peter Paul Marriage will find this news story useful.