RRR Others USA

வயிறு வலிக்க சிரிக்கப் போறீங்க”… சமந்தா பகிர்ந்த வைரல் photos!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதைப் படக்குழுவினர் அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Actress Samantha latest viral post about KVRK wrap

நானும் ரௌடிதான் கூட்டணியில் சமந்தா…

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டைட்டானிக் போஸ்டர் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Actress Samantha latest viral post about KVRK wrap

காதீஜாவா கண்மணியா?...

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசரில்  இருவருக்கும் சமமான வேடம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. டீசரில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரிடமும் விஜய் சேதுபதி பேசும் காட்சி இணையத்தில் வைரலாகி இப்போது மீம் டெம்ப்ளேட் ஆகியுள்ளது. இதனால் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரின் ரசிகர்களும் இந்த படத்தைக் காண ஆர்வமாக இருக்கிறார்.

சமந்தாவின் வைரல் photos…

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிந்துள்ளது. இதையடுத்து நடிகை சமந்தா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் படக்குழுவினரோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களோடு ‘படப்பிடிப்பு முடிந்தது. உங்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்க காத்திருக்க முடியவில்லை. ஏப்ரல் 28’ எனக் கூறி எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளார். சமந்தா பகிர்ந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Actress Samantha latest viral post about KVRK wrap

இயக்குனரின் நன்றி…

முன்னதாக இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் சிலப் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘இதை சாத்தியமாக்கிய கடவுளுக்கு நன்றி. அசாத்திய திறமையாளர்களோடு பணிபுரிந்துள்ளேன். அசாதாரணமான நடிகர்கள் எப்போதும் ஒரு இயக்குனரின் கனவுதான். இதைவிட ஒரு சிறந்த காம்பினேஷனை கேட்க முடியாது. சிறந்த நடிகரான விஜய் சேதுபதி, அழகான புரொபஷனலான நயன்தாரா,  திறமைவாய்ந்த சமந்தா… இவர்கள் அனைவரும் இந்த படத்தை மிகச் சிறப்பாக எடுத்து வந்துள்ளனர். இவர்களை ஒன்றினைத்தது நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன். இந்த படத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நீண்ட நாட்களுக்கு என் மனதில் இருக்கும். அனைவருக்கும் நன்றி’ என நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Samantha latest viral post about KVRK wrap

People looking for online information on KVRK, Nayanthara, Samantha, Vignesh shivam, Vijay Sethupathi will find this news story useful.