www.garudabazaar.com

‘மயக்கம் என்ன, ஒஸ்தி’ நாயகிக்கு குழந்தை பிறந்தது! பெயர் என்ன தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இப்போது ரிச்சா லாங்கெல்லா என்று அழைக்கப்படுவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்.

actress Richa Gangopadhyay blessed with a baby boy trending pics

டோலிவுட்டில் 2010 ஆம் ஆண்டு வெளியான 'லீடர்' திரைப்படத்தில் ராணா டகுபாட்டியுடன் அறிமுகமானார். பின்னர் 2011 ஆம் ஆண்டில் முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோருடன் தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

actress Richa Gangopadhyay blessed with a baby boy trending pics

தனுஷ் மற்றும் எஸ்.டி.ஆரின் கதாநாயகி ரிச்சாவை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது.  குறிப்பாக தனுஷுடன் செல்வராகவனின் இயக்கத்தில் மயக்கம் என்ன திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இதில் அழுத்தமாமான பாத்திரத்தில் நடித்த ரிச்சாவின் பங்கு இப்படத்துக்கு பலம் என்பதால், இப்படத்தை பார்த்த தமிழ் பார்வையாளர்களின் மனதில் ரிச்சாவின் கேரக்டர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  இதேபோல் சிம்புவின் காப் - டிராமா படமான ஒஸ்தியிலும் ரிச்சாவின் ரோல் கச்சிதமாக இருந்தது.

actress Richa Gangopadhyay blessed with a baby boy trending pics

ரிச்சா, கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது நீண்டகால காதலரான ஜோவுடன் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் அவர் தனது கர்ப்பத்தை அறிவித்தபோது அனைவரும் அவருக்கு வாழ்த்துகளை கூறினர். இந்நிலையில் தான் ரிச்சா  புதிதாக தனக்கு பிறந்த ஆண் குழந்தையின் சில படங்களைப் பகிர்ந்துள்ளார், மேலும் தனது ஆண் குழந்தையின் பெயரையும் வெளியிட்டுள்ளார்.

actress Richa Gangopadhyay blessed with a baby boy trending pics

இதுபற்றிய தமது பதிவில், “எங்கள் சிறிய குழந்தை லூகா ஷான் லாங்கெல்லா, 2021 மே 27 அன்று உலகிற்கு தனது வரவை தந்தார்! மம்மியும் அப்பாவும் மிகச் சிறப்பாக இருக்கி்றோம்.  எங்களின் இனிமையான சிறிய பீன் புரிட்டோவை மிகவும் வெறித்தனமாக காதலிக்கிறோம்.

actress Richa Gangopadhyay blessed with a baby boy trending pics

அவர் ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மகன் மற்றும் அவரது அப்பாவைப் போலவே இருக்கிறார், ஆனால் அம்மாவின் மூக்கு மற்றும் தலைமுடியுடன். 

லூகா நீங்கள் உண்மையிலேயே "ஒளியைக் கொடுப்பவர்"! நாங்கள் உங்களை எப்போதும் இப்படி குழந்தை பொக்கிஷமாகவே வைத்திருக்க விரும்புகிறோம்!” என பதிவிட்டுள்ளார்.

ALSO READ: “இது எப்ப?”.. தன் பட இயக்குநருடன் நடிகை திடீர் திருமணம் - வாழ்த்தி வரும் ரசிகர்கள்!

‘மயக்கம் என்ன, ஒஸ்தி’ நாயகிக்கு குழந்தை பிறந்தது! பெயர் என்ன தெரியுமா? வைரல் புகைப்படங்கள்! வீடியோ

actress Richa Gangopadhyay blessed with a baby boy trending pics

People looking for online information on Richa Gangopadhyay will find this news story useful.